×

கஜா நிவாரணம் வழங்குக! : செல்போன் கோபுரம் மீது ஏறி நாகை மீனவர்கள் போராட்டம்

நாகை : நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே படகு சேதத்திற்கான நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து 11 மீனவர்கள் செல்போன் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயல் பாதிப்பு

கடந்த நவம்பர் 15ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. குறிப்பாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.  குறிப்பாக வேதாரண்யம் அருகே கடற்கரை கிராமமான ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் கஜா புயல் தாக்கத்தால் தரையில் நிறுத்தப்பட்டிருந்த் 200க்கும் மேற்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகள், வலைகள் சேதமடைந்தன.

செல்போன் கோபுரங்கள் மீது ஏறி போராட்டம்

இதனிடையே கஜா புயல் பாதித்த பகுதிகளை சீர் செய்யவும், புயலால் பாதித்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழகத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியது. இதனைத் தொடர்ந்து புயல் பாதித்த வீடுகளுக்கும் படகுகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் புயல் பாதிப்பு ஏற்பட்டு 75 நாட்களுக்கு மேலாகியும் அரசு நிவாரணத் தொகை வழங்காததால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசு அறிவித்த நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரி 11 மீனவர்கள் செல்போன் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 2 மணி நேரத்திற்கு பிறகு மீனவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி போராட்டத்தை கைவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tower ,fishermen , Gaza Storm, Damage, Struggle, Cellphone, Towers, Fishermen
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...