×

சேலம் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீர் தீ விபத்து : ரூ.20 லட்சம்மதிப்பிலான பொருட்கள் சேதம்

சேலம் : சேலம் மாவட்டத்தில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. சேலம் மாவட்டம் உத்தம சோழபுரத்தில் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குடோன்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வாடகை அடிப்படையில் வைத்து, பின்னர் விற்பனைகாக வேறு இடங்களுக்கு கொண்டுச் சென்று வருகின்றனர்.

இங்குள்ள 10 கிடங்குகளில் 6ம் எண் கிடங்கில் இருந்து புகை வந்ததை அறிந்த காவலாளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். கிடங்கில் அதிகம் மஞ்சள் மூட்டைகள் இருந்ததால் தீயை அணைக்க முடியாத நிலை இருந்தது. இதனால் பொக்லைன் மூலம் பக்கவாட்டுச் சுவரை இடித்து நீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதற்குள் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் உதவியோடு வீரர்கள் தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Salem ,accident ,Agro-Ordinary Sector Fireplace , Salem, fire, accident, sales, police, warehouse, fire
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்