×

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வேதாந்தா நிறுவன மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

சென்னை: முறையான நடைமுறைகளை பின்பற்றாத வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் என்று  உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.  இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கடந்த 22ம் தேதி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,” மேற்கண்ட விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஆலையை திறக்க தமிழக அரசு ஏன் அனுமதிக்கவில்லை?. மேலும் ஆலைக்கு மின்சாரம் வழங்காமைக்கு காரணம் என்ன?.

இதுபோன்ற நடவடிக்கையால் நாங்களே ஆலை திறக்க உத்தரவிட நேரிடும் என சரமாரி கேள்வியெழுப்பி ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடித்து வைக்கப்படும் என கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது. அதில்,”ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை நீட்டித்து தரக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கடந்த 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் உரிமம் தொடர்பாக ஆன்லைன் மூலமாகத்தான் தான் பதிவு செய்ய வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் முறையான எந்தவித நடைமுறைகளை பின்பற்றாமல் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அதனால் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இதையடுத்து மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் இன்றைய விசாரணையின்போது அதுகுறித்து பரீசீலனை செய்வார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vetta ,plant ,Sterlite , Vedanta Sterlite,Supreme Court , State Government
× RELATED ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. 6ம்...