×

பெரா முறைகேடு வழக்கில் தொடர்பில்லாத ஆவணத்தை டிடிவி தினகரன் கேட்பதாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: அந்நிய செலாவணி, பெரா முறைகேடு ஆகியவை தொடர்பான வழக்கில் தொடர்பில்லாத சில முக்கிய ஆவணங்களை டிடிவி.தினகரன் கேட்டு வலியுறுத்துகிறார் என அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வேஸ்மென்ட் மூலமாக டெபாசிட் செய்ததாகவும், மேலும் அந்த வங்கியில் முறைகேடான முறையில் அந்த பணம் வைப்பு தொகை வைக்கப்பட்டுள்ளதாக இரண்டு வழக்கு உ ள்ளது.  தற்போது வரை விசாரணையில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் அந்நிய செலவாணி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி டிடிவி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்ற உத்தரவில்,” அந்நிய செலவாணி வழக்கு தொடர்பாக டிடிவி.தினகரன் தரப்பில் கொடுக்கப்பட்ட எந்த ஒரு வாதங்களையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்க முடியாது. இதைத்தவிர பெரா வழக்கில் டிடிவி. தினகரன் நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளையும் கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும். அதேப்போல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கும் அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறி   மேல்முறையீட்டு மனு மற்றும் அதேப்போல் இதே வழக்கில் அபராத தொகையாக விதிக்கப்பட்ட ரூ.28கோடியை ரத்து செய்ய வேண்டும் என அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் சேர்த்து தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் பெரா வழக்கு தொடர்பாக ஒருசில முக்கிய ஆவணங்களை தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் கேட்கும் ஆவணங்களை தரும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”பெரா முறைகேடு தொடர்பான வழக்கில் டிடிவி.தினகரன் சம்பந்தமில்லாத சில ஆதாரங்கள் கொண்ட ஆவணங்களை கேட்டு வலியுறுத்துகிறார். அவர் கேட்பது அனைத்தும் வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் டிடிவி.தினகரன் கேட்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் பட்டியலிடப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diwali Dinakaran , Foreign Exchange, Peru Abuse, Enforcement Department, DTV Dinakaran
× RELATED வரும் 26-ம் தேதி அமமுக வேட்பாளர்கள்...