×

சட்னியில் எலி; குடிநீரில் தவளை கல்லூரி கேன்டீன் உணவில் உலா வந்த விலங்குகள்: மாணவர்கள் அதிர்ச்சி

துரைப்பாக்கம்: கல்லூரி கேன்டீன் உணவில் எலி, குடிநீர் தொட்டியில் தவளை இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு, கேன்டீனில் உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் உணவு அருந்த மாணவர்கள், கல்லூரியின் கேன்டீனுக்கு சென்றனர். அங்கு, வாலியில் வைக்கப்பட்டு இருந்த தேங்காய் சட்னியில் எலி உயிருடன் உலாவிக் கொண்டு இருந்தது. இதை  பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து, உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களும் சப்பிடுவதை விட்டு பசியுடன் எழுந்து கை கழுவச் சென்றனர்.

அப்போது, அங்கு திரண்ட மாணவர்கள் சிலர், கேன்டீன் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சந்தேகத்தின் பேரில், அங்கு வைக்கப்பட்டு இருந்த குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை திறந்து பார்த்தபோது, அதனுள்  தவளை துள்ளிக் கொண்டிருந்தது.  இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, சுகாதாரமான உணவு வழங்காத கேன்டீன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chutney, rat, drinking water, frog, college canteen, food, tour, animals, students
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...