×

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணிடம் மைக்கை பறித்த சித்தராமையா: மைசூரு அருகே பரபரப்பு

மைசூரு: மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணின் கையில் இருந்த மைக்கை முன்னாள் முதல்வர் சித்தராமையா பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டத்தில்  உள்ள வருணா தொகுதிக்கு உட்பட்ட கர்கேஷ்வரி கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, தொகுதி எம்.எல்.ஏ. யதீந்திரா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தங்களின் குறைகளை தெரிவித்தனர். அப்போது, தாலுகா பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவி ஜமலார் எழுந்து, ‘‘மக்கள் பிரச்னைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பது  கிடையாது. அதேபோல், வருவாய் துறை, தாசில்தார் அலுவலகங்களில் மக்களின் பணிகள் எதுவும் நடைபெறுவது கிடையாது’’ என்று மைக்கில் தெரிவித்தார்.

அப்போது சித்தராமையா குறுக்கிட்டு, ‘‘இதை ஏன் என்னுடைய கவனத்துக்கு எடுத்து வரவில்லை?’’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ஜமலார், ‘‘உங்களிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க பலமுறை முயற்சித்தும்  முடியாத நிலை ஏற்பட்டது’’ என்று ஆவேசமாக மேஜையை தட்டி தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சித்தராமையா, ‘‘ஏன் மேஜையை தட்டி பேசுகிறாய்? உன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.  இகதை ஏற்றுக் கொள்ளாத ஜமலார், தொடர்ந்து மைக்கில் பேச ஆரம்பித்தார். இதனால் சித்தராமையாவின் கோபம் மேலும் அதிகமானது. திடீரென பாய்்ந்து, அந்த  பெண்ணின் கையில் இருந்த மைக்கை பறித்தார். அப்போது,  அவரது துப்பட்டா மைக்குடன் சேர்ந்து நழுவியது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sitharamayya ,crowd ,Muzur ,crowd meeting , People are lacking people, Mike, Sitharamaiah, Mysore
× RELATED முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக...