×

அமெரிக்கா பெண் டாக்டருடன் வெள்ளக்கோவில் வாலிபர் திருமணம்

வெள்ளக்கோவில்,: வெள்ளக்கோவில் வாலிபர் அமெரிக்க பெண்டாக்டரை பெற்றோர் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் துரைராமசாமி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி பேபி (எ) வீரக்குமாரி இவர்களது. மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ் 2 வரை  ஈரோடு மாவட்டம் பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி படிக்க சென்றார். அங்கு படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார்.

 இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. ஏஞ்செலா கிளைபர் டாக்டருக்கு படித்து முடித்தார். பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பிரித்வி செல்லமுத்து,  ஏஞ்செலாகிளைபர் திருமணம் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள சுப மகாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. முன்னாள் தமிழ் ஆசிரியர் பெரியசாமி திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமகள் ஏஞ்செலா கிளைபர் தமிழ் பாரம்பரிய பட்டு சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் பிரித்வி செல்லமுத்து தாலி கட்டினார். இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மணமகளின் தந்தை ஜோகிளைபர், தாய் வெரோனிக்கா கிளைபர் மற்றும் சில உறவினர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.  நிகழ்ச்சியில் பெண்ணின் பெற்றோரும் மாப்பிள்ளையின் பெற்றோரும் மாலை மாற்றி கொண்டனர். மணமக்கள் அவரவர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Weddy ,America ,doctor , American Girl Doctor, Weddy is married, love
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...