×

இளையராஜா இசை நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? : நீதிபதி சரமாரி கேள்வி


சென்னை : இளையராஜா- 75 என்ற பாராட்டு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சையராஜா-75 பாராட்டு விழா

ஆயிரம் திரைப்படங்களுக்கு அதிகமாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இளையராஜா இசை அமைத்துள்ளார். ஐந்து முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரைக் கவுரவிக்கும் வகையில், இசையராஜா-75 என்ற பெயரில் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இசை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எனவே பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விழாவிற்கு தடை கோரி மனு தாக்கல்


பொதுக்குழுவைக் கூட்டாமல் பிப்ரவரி 2ம் தேதி இளையராஜா விழாவை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான அணியினர் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 28ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வருவதால் இளையராஜா- 75 என்ற பாராட்டு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனிடையே ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பதில் அளித்தது.

எனினும் இளையராஜா பாராட்டு விழாவுக்கு செய்த செலவு எவ்வளவு? என்று நீதிமன்றம் வினவியது. இந்த நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு குறித்த அறிக்கையையும், நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு என்கிற விவரத்தையும் நாளை மறுநாளுக்குள் தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : producer association ,concert ,Saramari ,Ilayaraja , Ilayaraja, High Court, Question, petition, filing, Vishal, praise
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...