×

குண்டூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து... மாணவர்கள் பலர் காயம்

குண்டூர்: குண்டூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சென்ற தனியார் பள்ளி வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த வாகனத்தில் பயணித்த 15 மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசான காயமும், 2 மாணவர்களுக்கு பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை அடுத்து காயமடைந்த மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : private school, vehicle collapsed , Kundur
× RELATED மிசோரம் மாநிலத்தின் அய்ஸால்...