×

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு மண்டியிட்டு கிடக்கிறது: வெணிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை தானே அறிவித்துக் கொண்ட ஜூவான் கெய்டோவை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் ஆதரிப்பதற்கு அதிபர் நிகோலஸ் மதுரோ கண்டனம் தெரிவித்துள்ளார். கராக்கசில் பேசிய நிகோலஸ் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்பு மண்டியிட்டு கிடப்பதாக விமர்சனம் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா அரசுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் துரோகம் இழைப்பதாகவும் நிகோலஸ் கூறினார்.

இதனிடையே வெனிசுலாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் ஆதரவு கேட்டு வருவதாக தன்னை தானே அதிபராக அறிவித்துக் கொண்ட ஜூவான் கெய்டோ கூறியுள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது தேர்தலில் சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ள நிலையில் எதிர்கட்சி தலைவரான ஜூவான் கெய்டோ தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார். இதனிடையே  8 நாட்களில் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவிக்கவில்லை என்றால் ஜூவான் கெய்டோவை அதிபராக அங்கீகரிக்க இருப்பதாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் தெரிவித்துள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states ,European ,Trump ,Nicolas Maduro ,American , Venezuela, Nicholas Maduro, Juan Guido, United States
× RELATED நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி...