×

அஞ்செட்டி அருகே பரபரப்பு எருதுவிடும் விழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து: கோஷ்டி மோதலால் மறியல்; போலீஸ் தடியடி

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே எருதுவிடும் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. இதையடுத்து, சாலை மறியல் செய்தவர்களை போலீசார் லேசாக தடியடி நடத்தி கலைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, பைல்காடு கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. அங்கு மாடு பிடிப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது. இதில்,  சித்தாண்டபுரத்தைச் சேர்ந்த வேலு(23) என்பருக்கு கத்தி குத்து விழுந்தது.

உடனடியாக அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை கண்டித்து வேலு தரப்பினர் அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அவர்களை கலைந்து  போகுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால், வேலுவை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என அவர்கள் கூறினர். இதையடுத்து, கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் லேசான  தடியடி நடத்தினர். இதனால், அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த போராட்டத்தால் அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivities ,confrontation ,Anjeti , Anchotti, bullshit festival, youth, knife, clash, stir, police bathe
× RELATED மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும்...