×

மலேசிய மணல் ஒரு யூனிட் ரூ.10,013 ஆக குறைந்தது: எண்ணூர் துறைமுகம் வந்த 50 ஆயிரம் டன் மணல் இன்று முதல் முன்பதிவு

சென்னை: மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த 50 ஆயிரம் டன் மணல் இன்று முதல் மணல் முன்பதிவு செய்யப்படுகிறது. வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் 1 லட்சம் டன் மணல் வருகிறது  என்று மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து,  ரூ.548 கோடி செலவில் 30 லட்சம் டன் மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து, 56,750 மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மணலுக்கான விற்பனை கடந்த அக்டோபர் 8ம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், 50 நாட்களில் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக கடந்த நவம்பர் 20ம் தேதி 52 ஆயிரம் டன் மணலும் தொடர்ந்து, கடந்த நவம்பர் 27ம் தேதி 55 ஆயிரம் டன்  மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த மணல் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், 49,699 டன் மணலை ஏற்றி கொண்டு மலேசியாவில் இருந்து புறப்பட்ட நான்காவது கப்பல் கடந்த ஜனவரி 21ம் தேதி எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பல் வந்து சேர்ந்தது. இந்த மணலுக்கான முன்பதிவை இன்று  மாலை முதல் தொடங்கப்படுகிறது. இதை தொடர்ந்து புக்கிங் செய்யப்பட்ட லாரிகளுக்கு நாளை முதல் மணல் விநியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் 50 ஆயிரம் டன் கொண்ட கப்பலும்,  பிப்ரவரி 15ம் தேதியில் 50 ஆயிரம் டன் கொண்ட மற்றொரு கப்பல் எண்ணூர் துறைமுகத்திற்கு வருகிறது என்று மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்குனரகம் மேலும்,  கூறும் போது, ‘மலேசிய மணல் ஒரு யூனிட் ரூ.10.350 விற்பனை செய்யப்பட்டது. தற்போது, டாலரின் மதிப்பு சரிந்ததால் மணல் விலை ஒரு யூனிட் ரூ.337 ஆக குறைந்து, ரூ.10,013க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல்  இந்த விலைக்கு மணல் நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malaysian , Malaysian sand, Ennore harbor, sand, reservation
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்