×

சிறப்பு பயிற்றுநர், இதர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருங்கிணைந்த கல்வி - உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் தமிழக பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி, இயன்முறை பயிற்சி,  ஆலோசனை மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றை அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல்நேர பாதுகாப்பு மையங்களின் காவலர்கள், உதவியாளர் ஆகியோர் 1998ம் ஆண்டு முதல் மாவட்ட தொடக்க  கல்வித் திட்டத்திலும், 2002ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். 2002ம் ஆண்டு முதல் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்கள் தங்களின் கோரிக்கைகளை  தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறன் குழந்தைகள் நலன் காக்கப்பாடுபடுகின்ற சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யவும், தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியேற்பு ஆணை வழங்கிடவும், மாநில மாவட்ட மற்றும் வட்டார வளமையங்களில்  பணிபுரிந்து வரும் உள்ளடங்கியக் கல்வி ஒருங்கிணைப்பாளர்களை சிறப்புக்கல்வி பயின்றவர்களை பணியமர்த்திடவும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும், பணியாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கவும், பகல்நேர பாதுகாப்பு  மையம், தொடக்க நிலை ஆயத்தப் பயிற்சி மையங்களில் பணிபுரியும் பராமரிப்பாளர்களுக்கு சிறப்புப் பயிற்றுநர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Instructor ,Government ,Vasan , Special Instructor, Other Staff, Request, Government, Vasan
× RELATED வெயிலின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு...