×

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ஆசாமி கைது

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் வடபழனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நேற்று முன்தினம் விமானநிலையம் நோக்கி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தனர். பெட்டியில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தனர். அப்போது 45வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இளம் பெண்களை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார்.

அந்த இளம் பெண்களுக்கு தெரியாமல் ஆபாசமாக தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதை பார்த்த பெண்களில் ஒருவர் அதிர்ச்சியடைந்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் அரைகுறை ஆடை அணிந்து வந்தால் இப்படித்தான் படம் பிடிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்கள் மெட்ரோ ரயில் வடபழனி ரயில் நிலையத்தை வந்து அடைந்ததும் ரயில்நிலைய கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணியிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் அவர் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அவரது செல்போனை ஆய்வு செய்தார்.

அப்போது புகார் அளித்த பெண்களை பல கோணங்களில் படம் பிடித்தது தெரியவந்தது. உடனே வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வந்து, பெண்களை ஆபாசமாக படம் பிடித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (45) என்றும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தது, பெண்களை ஆபாச படம் பிடித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asmami , Metro train ride Younger porn Asimi arrested
× RELATED மைனர் பெண்ணுக்கு ஆசை காட்டி 80 வயது...