×

இந்திய தேசப்பற்றாளர்களால் காலிஸ்தான் ஆதரவாளர்களின் அநாகரீக முயற்சி முறியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய துாதரகத்தின் முன் இந்திய தேசியக் கொடியை எரிக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவில் குடியரசு தினம் நேற்று முன்தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நேற்று முன்தினம் காலிஸ்தான்  ஆதரவாளர்கள் (இந்தியாவில் தனிநாடு கோரும் சீக்கியர்கள்) கூடினர். அவர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டுக்கொண்டு இந்திய தேசியக் கொடியை எரிக்க முயற்சித்தனர். அப்போது அமெரிக்காவில் வாழும்  இந்தியர்களும் அங்கே அதிகமாக கூடியிருந்தனர், அவர்களும்  காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,  வந்தே மாதரம் என்றும் பாரத மாதாக்கி ஜே என்றும் கோஷமிட்டு அவர்களை நோக்கி முன்னேறினர்.

இதனைத்ெதாடர்ந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொடியை எரிக்கும் முயற்சியானது இந்தியர்களால் தடுக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார், கொடியை எரிக்கக்கூடாது என்று காலிஸ்தான் ஆதரவாளர்களை எச்சரித்து  கலைந்து போகச் செய்தனர். இந்த செயலால் தூதரகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இச்சம்பவத்துக்கு பல்வேறு இந்திய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : supporters , Indian patriots Failure of Khalistan supporters
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...