×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீரரான ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்) நேற்று மோதிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்களிலும் நடாலின் சர்வீஸ்  ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 6-3, 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஆஸி. ஓபனில் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் மற்றும் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை (தலா 6 பட்டங்கள்) முந்தினார். இது அவரது 15வது கிராண்ட்  ஸ்லாம் பட்டமாகும். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் பட்டியலில் பெடரர் (20), நடால் (17), ஜோகோவிச் (15) முதல் 3 இடங்களில் உள்ளனர்.நடாலுடன் 53 முறை மோதியுள்ள ஜோகோவிச் 28-25 என முன்னிலை வகிக்கிறார். கடைசியாக மோதிய 16 போட்டிகளில் அவர் 13ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jokovich , Australian, Open Tennis,Jokovich champion
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்