×

இந்தோனேசிய மாஸ்டர்சில் சாய்னா சாம்பியன்: காயத்தால் விலகினார் மரின்

ஜகார்தா: இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) நேற்று மோதிய சாய்னா, முதல் செட்டில் 3-9 என்ற கணக்கில் பின்தங்கினார். இந்த நிலையில், வலது முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக மரின் தடுமாறினார். சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடிய அவர் 10-4 என முன்னிலை வகித்த நிலையில் போட்டியில் இருந்து விலகுவதாக கண்ணீருடன் அறிவித்தார்.

 இதைத் தொடர்ந்து சாய்னா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த 2 ஆண்டுகளில் சாய்னா வென்ற முதல் பி.டபுள்யு.எப் பட்டம் இது. மரின் - சாய்னா மோதியுள்ள 12 போட்டிகளில் இருவரும் தற்போது 6-6 என சமநிலை  வகிப்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய மாஸ்டர்சில் பட்டம் வென்றது குறித்து சாய்னா கூறுகையில், ‘பைனலில் மரின் காயம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த வகையில் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. கடந்த சில  ஆண்டுகளாக நானும் காயங்களால் அவதிப்பட்டிருக்கிறேன். மனதளவில் அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துள்ளேன். ஒலிம்பிக்சில் எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டபோது மிகுந்த ஏமாற்றம்  அடைந்தேன். இன்று அதே போன்ற நிலையில் மரினை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina ,Indonesian Master: Marin , In Indonesian Master Saina's Champion: Marin isolated from injury
× RELATED அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு...