×

பொங்கல் முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் கோயில் பணியாளர்களுக்கு போனஸ் இல்லை: எப்போது வரும் என எதிர்பார்ப்பு

சென்னை: பொங்கல் முடிந்தும் அறநிலையத்துறையில் பணிபுரியும் கோயில் பணியாளர்களுக்கு போனஸ் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40,190 கோயில்கள் உள்ளது.  இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இதில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர், மேலாளர், அர்ச்சனை சீட்டு வழங்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் என 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1000 வழங்க கடந்த ஜனவரி 9ம் தேதி அப்போதைய அறநிலையத்துறை கமிஷனர் டி.கே.ராமச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த போனஸ்  பெற கடந்த 2017-18ம் ஆண்டில் 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போனஸ் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத கோயில் பணியாளர்களுக்கு மட்டுமே பொங்கலுக்கு முன்பு  போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட யாருக்கும் போனஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. பொங்கல் முடிந்து தற்போது ஒரு வாரத்திற்கு மேல் ஆன நிலையில் அவர்களுக்கு  போனஸ் வழங்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கு போனஸ் வருமா, இல்லையா என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple employees ,Pongal , Pongal, Temple Staff, Bonus
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா