×

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி பதர் சயத் காங்கிரசில் இணைந்தார்: செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய ேதாழியான பதர் சயத் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். அவருக்கு காங்கிரசில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அவருடன் படித்தவரும், திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயத். இவர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை விட்டு ஒதுங்கியே இருந்து  வந்தார்.இந்த நிலையில் நேற்று காலை அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்கு அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு திருநாவுக்கரசர் சால்வை  அணிவித்து வரவேற்றார். மேலும் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையையும் அவர் வழங்கினார்.

இதே ேபால், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அரும்பாக்கம் வீரபாண்டியன் ஏற்பாட்டில் சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன், சினிமா டைரக்டர் லோக கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் செல்லக்குமார், துணை தலைவர் தாமோதரன், மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் வீரபாண்டின்.  எம்.எஸ்.திரவியம், ரூபி மனோகரன், அணித் தலைவர்கள் அசன் ஆரூண், ஜான்சிராணி,  நவீன், கஜநாதன் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்துள்ள பதர் சயதை, உடனடியாக காங்கிரஸ் கட்சியின் செய்தி  தொடர்பாளராக நியமித்து திருநாவுக்கரசர் உத்தரவிட்டார். தொடர்ந்து பதர் சயித் அளித்த பேட்டியில், “ஜெயலலிதா இருந்த போது கட்சியில் உரிய மரியாதை இருந்தது. அவரது மறைவிற்கு பிறகு கட்சியில் உரிய மரியாதை  இல்லை. ஜெயலலிதா இருந்த போது அவர் மட்டும் தான் தலைவராக இருந்தார். ஆனால் அதிமுகவில் தற்போது அப்படி இல்லை. கட்சியில் உள்ள எல்லோரும் தலைவராக இருக்கிறார்கள்” என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pather Syed ,Jayalalithaa ,Congress ,spokesperson , Jayalalithaa's friend, Pradar Saeed, Congress, spokesperson
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...