×

அணை உடைந்ததால் வெள்ளம்: சுரங்க தொழிலாளர்கள் 300 பேரை காணவில்லை...பிரேசிலில் அதிர்ச்சி

புருமாடின்கோ: பிரேசில் நாட்டில் அணை உடைந்ததால் சுரங்கத் தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர். மேலும், 300 பேரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.பிரேசில் நாட்டில் உள்ள  மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தின் புருமாடின்கோ நகரம் அருகே, ‘வாலே’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. இதன் அருகே நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத அணை இருந்தது.  நேற்றிரவு சுரங்கம் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பழைய அணை திடீரென உடைந்தது. அதில் இருந்த சேறும் சகதியுமான தண்ணீர், வெள்ளமாக பெருக்கெடுத்து  ஓடியது. இதில்,  சுரங்க பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 300 பேரை காணவில்லை.

அவர்களில் 150 பேர் சுரங்க நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள். மற்றவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள். அவர்களை மீட்க முழுவீச்சில் மீட்பு பணி நடக்கிறது. இவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை. இதனால், பலி  எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிரேசில் நாட்டின் புதிய அதிபராக ஜெய்ர் பொல்சனாரோ சமீபத்தில் பதவியேற்றார். ்அதன் பிறகு நடந்த முதல் இயற்கை பேரழிவாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. மீட்பு  பணிகளை அதிபர், சுற்றுச்சூழல் அமைச்சர், சுரங்கத்துறை அமைச்சர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.இது குறித்து வாலே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஃபேபியோ ஷ்வார்ட்மேன் கூறியபோது,  “அணை உடைந்தது மனித குலத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. விபத்து நடந்த பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : miners ,Brazil , Dam, floods, miners, braces
× RELATED தைவானில் பயங்கர நிலநடுக்கம்; 9 பேர் பலி;...