×

கண்ணிமைக்கும் நேரத்தில் கேசுவலாக ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனி: கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு!

மவுன்ட் மாங்கனுயி: கண்ணிமைக்கும் நேரத்தில் கேசுவலாக ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தோனி ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கனுயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 324 ரன்களை எடுத்தது. 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 40.2 ஓவரில் 234 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி, 33 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில், நியூசிலாந்து பேட்டிங்கின்போது, 18வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ராஸ் டெய்லர் முன்னால் வந்து விளையாட ஆசைப்பட்டு பந்தை அடிக்காமல் தவறவிட்டார். உடனே பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் தோனி, கண்ணிமைக்கும் நேரத்திலும் கேசுவலாகவே ஸ்டம்பிங் செய்து நியூசிலாந்து வீரர்களை மிரள வைத்தார். வெறும் 0.08 நொடிகளில் இந்த ஸ்டம்பிங்கை செய்துள்ளார் தோனி. கள நடுவரே சற்று நேரம் ஆச்சரியப்பட்டு அவுட்டா? இல்லையா? என்ற முடிவை மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார். இதனைத் தொடர்ந்து ராஸ் டெய்லர் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. தோனி ரன் ஓடுவதில் மட்டுமல்ல, ஸ்டம்பிங் செய்வதிலும் சிறுத்தை வேகத்தில் செயல்படுவது இந்திய அணிக்கு மிகுந்த பலத்தை கொடுத்து வருகிறது. தோனி, 3வது ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், 337வது போட்டியில் விளையாடினார். இதன்மூலம், இந்திய அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடிவர்கள் பட்டியலில் 3வது இடத்தை அவர் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhoni ,Cricket fans , Dhoni,Stumping,ODI,NewZealand,Ross Ttaylor
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...