×

அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் தென்பட்டதால் கடல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

ஹோலிஹெட்: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் தென்பட்டதால் கடல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தில் வேல்ஸ் கடற்கறையில் தென்பட்டுள்ளது. ஹோலிஹெட் பகுதியில் உள்ள வட வேல்ஸ் கடற்கரையில் தென்பட்ட தட்டைச் சுறாவை சில மீனவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுப் பகுதியில் கடலில் துள்ளி விளையாடிய சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனை ஆய்வு செய்ததில் அந்தச் சுறா அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தட்டைச் சுறா என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது வேல்ஸ் பகுதியிலும் இந்த சுறா தென்பட்டுள்ளதால் இந்த சுறாக்கள் வேல்ஸ் மற்றும் கேனரி தீவுப் பகுதிக்கு இடையில் நீந்தி வாழலாம் என கருதப்படுகிறது. இந்த வகை சுறாக்கள் ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வரைமுறையற்ற வேட்டை, வாழ்விடங்களில் தொந்தரவு மற்றும் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்தச் சுறா கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணவில்லை என்பதால் அழிந்துவிட்டதாக கருதப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : researchers , Flat Shark, Angel Shark, Marine Analysts
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...