×

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

நியூசிலாந்து : நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஷமி, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் சிறப்பாக விளையாடி நியூசிலாந்தை 157 ரன்னில் சுருட்டினர். பேட்டிங்கிற்கு சாதகமான அந்த மைதானத்தில் நியூசிலாந்து அணி 300 ரன்னுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. அதே போல இன்றைய போட்டி நடக்கும் மைதானமும் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது. மேலும் கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று போட்டி நடைபெற்று வரும் மைதானத்தில் இதற்கு முன்னர், இலங்கைக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய விராத் கோலி தலைமையிலான இந்திய அணியே இந்தப் போட்டியிலும் களமிறங்கியது. நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் சன்ட்னர், வேகப்பந்து வீச்சாளர் சவுதி நீக்கப்பட்டு சோதி, கிராண்ஹோம் திரும்பியுள்ளனர். முன்னதாக மைதானத்திற்கு வந்த இந்திய அணிக்கு மவுரி பழங்குடி சமூகத்தினரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,Indian , New Zealand, 2nd ODI, Indian team, batting
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது