×

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் அரை இறுதியில் சாய்னா நெஹ்வால்: கிடாம்பி, சிந்து ஏமாற்றம்

ஜகார்தா: இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். கால் இறுதியில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்குடன் நேற்று மோதிய சாய்னா 21-7, 21-18 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். சென் ஜியாக்ஸின் - ஹி பிங்ஜியாவோ இடையே நடைபெறும் கால் இறுதியில் வெற்றி பெறும் வீராங்கனையுடன் அரை இறுதியில் சாய்னா மோதவுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி காந்த் 18-21, 19-21 என்ற நேர் செட்களில் உள்ளூர் நட்சத்திரமும் ஆசிய சாம்பியனுமான ஜொனாதன் கிறிஸ்டியிடம் போராடி தோற்றார். சிந்து அதிர்ச்சி: மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் களமிறங்கிய மற்றொரு இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 11-21, 12-21 என்ற நேர் செட்களில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina Nehwal ,Guatemala ,Sindhu , Indonesian Masters, and finally Saina Nehwal, Kitabi, Sindhu
× RELATED ஏழுமலையான் தரிசனம் இ-பாஸ் கிடைக்காமல்...