×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறினார் ஜோகோவிச்: சமந்தா - ஸாங் ஜோடி சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 7வது முறையாக தகுதி பெற்றார். அரை இறுதியில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் பவுல்லியுடன் (28வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச், அதிரடியாக விளையாடி பவுல்லியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 6-0 என வென்று முன்னிலை பெற்றார். அடுத்த செட்களிலும் ஜோகோவிச்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய பவுல்லி எதிர்ப்பின்றி சரணடைந்தார்.

ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி 7வது முறையாக ஆஸி. ஓபன் பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன் விளையாடிய 6 பைனலிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள பரபரப்பான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலை எதிர்கொள்கிறார். இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ள 14 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நடால் 9-5 என முன்னிலை வகிக்கிறார். இதில் அவர் 6 வெற்றிகளை களிமண் தரை மைதானங்களிலேயே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீரர்கள் பைனலில் மோதவுள்ளது டென்னிஸ் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் - ஷுவாய் ஸாங் (சீனா) ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் டிமியா பாபோஸ் - கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா இன்று மோதுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samantha - Zang ,Australian Open , Australian Open Tennis, Jokovich, Samantha, Zong Jongi Champion
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...