×

சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து, கனக துர்காவுக்கு கேரள போலீஸ் பாதுகாப்பு

திருவனந்தபுரம்: ‘சபரிமலையில் தரிசனம் செய்த  பிந்து, கனக துர்காவுக்கு அரசு உத்தரவுப்படியே போலீசார் பாதுகாப்பு அளித்து, கோயிலுக்கு அழைத்து சென்றனர்’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் பத்தனம்திட்டா எஸ்பி. நாராயணன்  தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோட்டை  சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு இளம்பெண்களும்  கடந்த 2ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர். இதையடுத்து, கேரளா முழுவதும்  கலவரம் வெடித்தது.  இதற்கிடையே சபரிமலையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஆய்வு  செய்து அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் கொண்ட குழுவை கேரள உயர்நீதிமன்றம்  நியமித்தது.

இக்குழு இளம் பெண்கள் சென்றது குறித்து விசாரணை நடத்தி  உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதை  பரிசீலித்த உயர்நீதிமன்றம் 2 இளம் பெண்களை அழைத்து சென்றது குறித்து  பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய பத்தனம்திட்டா எஸ்.பி. நாராயணனுக்கு  உத்தரவிட்டது. அந்த வாக்குமூலத்தில், ‘அரசு உத்தரவுபடி தான் பிந்து, கனகதுர்க்காவுக்கு பாதுகாப்பு அளித்தோம்.உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தான்  இருவரும் தரிசனத்துக்காக வந்தனர்’ என கூறியுள்ளார்.

17 இளம் பெண்கள் தரிசனம்
சபரிமலையில்  கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் 51 இளம் பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு  செய்து தரிசனம் செய்ததாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால்,  அந்த பட்டியலில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்  என்றும், 4 ஆண்கள் பெயர் பட்டியலில் இருந்ததும் பின்னர் தெரியவந்தது.  இதையடுத்து கேரள அரசு பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்ததாக சர்ச்சை  எழுந்தது.  இதையடுத்து, தரிசனத்துக்கு  சென்றவர்கள் பட்டியலை திருத்தி மீண்டும் நீதிமன்றத்தில் அளிக்க அரசு  தீர்மானித்தது. இதன்படி நடந்த ஆய்வில் பட்டியலில் 4 ஆண்கள் இருப்பதும், 30 பேர்  50 வயதுக்கு மேல் ஆனவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்கள்  அனைவரையும் நீக்கிவிட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, தரிசனம்  செய்தது 17 இளம் பெண்கள் மட்டுமே என தெரியவந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bindu ,dancer dancers ,Kerala , சபரிமலை, தரிசனம் , பிந்து, கனக துர்கா, கேரள போலீஸ் பாதுகாப்பு
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...