×

கும்பகோணத்தில் தனலட்சுமி சீனிவாசன் நிதி நிறுவன 9வது கிளை துவக்கம்: நிறுவனர் திறந்து வைத்தார்

சென்னை: கும்பகோணத்தில் தனலட்சுமி சீனிவாசன் நிதி நிறுவன 9வது கிளையை தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் விஜயலட்சுமி திரையரங்கம் எதிரில் டாக்டர் பெசன்ட் ரோட்டில் நேற்று தனலட்சுமி சீனிவாசன் நிதி நிறுவன 9வது கிளை திறப்பு விழா நடந்தது. கிளையை தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்து திறந்து வைத்தார்.

இதைதொடர்ந்து வைப்பு நிதி தொகையையும், தங்க நகை அடமான கடனையும் வழங்கி துவக்கி வைத்தார். செயல் இயக்குனர் முரளி முன்னிலை வகித்தார். துணை பொது மேலாளர் சுகுமாறன், மண்டல மேலாளர் வெங்கடேசன் மற்றும் கும்பகோணம் வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Founder ,Dhanalakshmi Srinivasan Finance Branch 9th Branch ,Kumbakonam , Kumbakonam, Dhanalakshmi Srinivasan Financial Institute
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...