×

வால்பாறையில் காட்டு யானைகள் வாழை தோட்டங்களை சேதப்படுத்தி அட்டகாசம்

வால்பாறை: வால்பாறை நகருக்குள் புகுந்த காட்டு யானைகள் 4வது நாளாக தோட்டங்களில் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளது. வால்பாறை டவுன் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு காட்டு யானைகள் தற்போது அடிக்கடி வரத் துவங்கி உள்ளது. நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் இருந்து ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்குள் நுழைவதற்கு வால்பாறை புதிய பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் செல்லும் யானைகள், நகராட்சி ஆய்வு மாளிகை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் பகுதி வழியாக சென்று வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து 4வது நாளாக அப்பகுதியில் உள்ள தோட்டங்களை காட்டு யானைகள் சூறையாடியது. தோட்டங்களில் உள்ள வாழைகளை ருசித்த காட்டு யானைகள் தமிழ்நாடு வாணிபகழக குடோன்  வளாகத்திற்குள் நுழைய முயன்று உள்ளது. யானைகள் மீண்டும் மீண்டும் அரிசியை தின்பதற்காக குடோன்  வளாகத்திற்குள் நுழைய முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Valparai , Valparai, wild elephants, banana tree
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை