×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் நீரில்லாமல் கருகும் பயிர்கள் : விவசாயிகள் தவிப்பு

வருசநாடு: கடமலை  மயிலை ஒன்றியத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் கத்தரி உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடமலை - மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே போதிய மழை இல்லாமல் கிணற்று நீர்பாசனமும், ஆழ்துளைகிணற்று நீர்பாசனமும் வற்றி விட்டது. இதனால் விவசாயத்திற்கு போதிய நீர் இல்லாமல் மானாவாரி நிலங்களாக கடமலை  மயிலை ஒன்றியம் மாறிவருவதால் விவசாயிகள் கதறி வருகின்றனர்.

வருசநாடு பகுதி விவசாயி ராமர் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் டிராக்டர்களில் தண்ணீர் வாங்கி விவசாயம் செய்யும் நிலை எற்பட்டுள்ளது.  இதே நிலை நீடித்தால் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே விவசாய பயிர்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது. தற்போது நீரின்றி கத்தரி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கருகி வருகின்றன.  எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kadimalai - Ullalai ,Union Union , Katamalai, crops, farmers
× RELATED கிராம மக்கள் கோரிக்கை; கந்தர்வகோட்டை...