×

ஆஸி. ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஒசாகா-குவித்தோவா மோதல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்ிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  ஜப்பானின் நகோமி ஒசாகா,  செக் குடியரசின் பெட்ரா குவித்தோவா ஆகியோர் விளையாட தகுதிப் பெற்றுள்ளனர்.
முதல் அரையிறுதிப்போட்டியில்  செக்குடியசின்  கரோலினா பிளிஸ்கோவா, ஜப்பானின்  நகோமி ஒசாகா ஆகியோர் மோதினர். செரீனா வில்லியம்சை அதிரடியாக வீழ்த்திய பிளிஸ்கோவா முதல் செட்டில் நகோமியின் சர்வீசுகளை சமாளிக்க முடியாமல் திணறினார். அதனால் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் நகோமி எளிதில் வென்றார்.

ஆனால் அடுத்த செட்டில் பிளிஸ்கோவா காட்டிய வேகம் நகோமியை அசைத்து பார்த்தது. அதனால் அந்த செட்டை பிளிஸ்கோவா 6-4 என்ற புள்ளி கணக்கில் போராடி வென்றார். அதானல் எதிர்த்த பார்த்தபடியே 3வது செட்லில் இரண்டு தரப்பும் வெற்றிக்கு கடுமையாக போராடியது. பிளிஸ்கோவா அசந்த நேரத்தில் நகோமி வேகமெடுக்க அந்த செட் அவர் வசமானார்.அதனால்  அமெரிக்க ஓபன் டென்னிசின் நடப்பு சாம்பியன் நகோமி ஒசாகா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில்  கரோலினா பிளிஸ்கோவாவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.அதேபோல் 2வது அரையிறுதிப் போட்டியில் 2முறை விம்பிள்டன் பட்டம் வென்  செக் குடியரசின்  பெட்ரா குவித்தோவா, அமெரிக்காவின்  டேனியலி கொலின்ஸ் ஆகியோர் மோதினர்.

 முதல் செட்டில்  குவித்தோவா-கொலின்ஸ் இருவரும் வெற்றிக்கு கடுமையாக போராடினர். முதல் செட்டில் யாருக்கு வெற்றி கிடைக்கும்  என்பதை முடிவு செய்யாத அளவுக்கு இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆனாலும் கடைசி நேரத்தில் கொலின்ஸ் செய்த தவறால் முதல் செட்டை 7-6 என்ற புள்ளிகள் கணக்கில்  குவித்தோவா வென்றார். முதல் செட்டில் தோற்றதால் கொலின்ஸ் தளர்ந்து போனதால் 2வது செட்டை 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் குவிதோவா எளிதில் வசப்படுத்தினார். எனவே ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் இறுதிப்போட்டியில்  நகோமி ஒசாகா(4வது ரேங்க்)-பெட்ரா குவித்தோவா(6வது ரேங்க்) ஆகியோர் களம் கண உள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதிப்போட்டி ஒன்றில்  ஸ்பெயினின் ரபேல் நடால், கிரீசின்  ஸ்டீபன்ஸ் டிஸிடிஸிபஸ் ஆகியோர் விளையாடினர். அதில் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் ஸ்டீபன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால். 32 வயதான நடால் இதுவரை 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,Osaka-Kuvetto Conflict ,Open Tennis Final , Australian Open Tennis, Osaka, Kuwitova
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...