மலேசிய புதிய மன்னரானார் அப்துல்லா

கோலாலம்பூர்: மலேசியாவில் அரசியலைமைப்பு அடிப்படையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. 9 மாகாணங்களை கொண்ட கூட்டமைப்பாக விளங்கும் முஸ்லிம் நாடான மலேசியாவில் 5 ஆண்டுக்கு ஒரு முறை புதிய  மன்னர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் சுல்தான் 5ம் முகமது மலேசியாவின் மன்னராக பதவி வகித்து வந்தார். அவர் ரஷ்ய அழகியை திருமணம் செய்து கொண்டதால் மன்னர் பதவியில் இருந்து அவர்  விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதுக்கோட்டை ஆளப்பிறந்தான்...