×

பேராவூரணி அருகே தண்ணீர் பொங்கும் கிணற்றில் ஓஎன்ஜிசி நிபுணர்கள் ஆய்வு

பேராவூரணி:  தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வளபிரமன்காடு ஊராட்சியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான  தோட்டத்தில் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் 1982ம் ஆண்டு 100 அடி அளவில் போர்வெல் போடப்பட்டது. அதில் கடந்த ஒரு மாதமாக அதிகளவில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி வருகிறது.  தற்போது அந்த பகுதியில் உள்ள கிணறுகளில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில்  சிங்காரத்தின் கிணற்றில் மட்டும் நீர்  பொங்கிகொண்டே இருக்கிறது. அதாவது கிணற்றுக்குள் இருந்து அதிக அளவில் வாயுக்கள் வெளியேறி நீர்க்குமிழிகள் வெளியேறுகிறது. அதே நேரத்தில் தண்ணீரும் பொங்கிகொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தினமும் ஏராளமான மக்கள் வந்து அந்த கிணற்றை பார்த்து செல்கிறார்கள். அதே நேரத்தில் தண்ணீரில் எந்த வித்தியாசமும் இல்லை.  சுவையும் மாறவில்லை.

இதை  அறிந்த கலெக்டர் அண்ணாதுரை பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு, தாசில்தார் பாஸ்கரன், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள்  வந்து கிணற்றை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் புவியியல் துறை மற்றும் ஓஎன்ஜிசி அலுவலர்களை கொண்டு கொந்தளிப்பு ஏற்படும் கிணற்றை ஆய்வு செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்று நாகை மாவட்டத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிபுணர்கள் வந்து அந்த கிணற்றை ஆய்வு செய்கிறார்கள். பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு, தாசில்தார் பாஸ்கரன், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ONGC ,experts ,Beravoorani , Explore ,ONGC, water , Beravoorani
× RELATED 25 தனியார் துறை நிபுணர்களுக்கு ஒன்றிய அரசு பணி