×

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் 11 கிலோ மீட்டர் அடிப்பிரதட்சணம் செய்து பெண் பக்தர் நேர்த்திக்கடன்

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைபூச தேர் விழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல காவடிகள் எடுத்தும் நடை பயணமாக வந்தும் தங்களது வேண்டு தலை நிறைவேற்றினர்.

இப்படி பல விதமான வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி வர, மின்னக்கல் பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது வீட்டில் இருந்து கோயிலுக்கு அடிப்பிரதட்சணமாக வருவதாக வேண்டுதல் வைத்திருந்தார். அதன் படி கடந்த திங்கட்கிழமை சாந்தி வீட்டில் இருந்து அடிமேல் அடி வைத்து, அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டு, 11 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, இரவு காளிப்பட்டி கோயிலுக்கு வந்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த வேண்டுதல் பல பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kelipatti Kandasamy ,devotee , Kelipatti Kandasamy,11 feet, performed ,female devotee
× RELATED பக்தர்களை காக்கும் பக்த அனுமன்