×

முத்துப்பேட்டையில் கஜா புயலால் சேதமான சாலை 69 நாட்களாகியும் சீரமைக்காததால் மக்கள் கடும் அவதி

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் கஜாபுயலால் சேதமான சாலை 69 நாட்களாகியும் சீரமைக்காததால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 4வது வார்டு பகுதியான யூனியன் ஆபீஸ் பின்புறம் ரயில்வே நிலையத்தை ஒட்டி ஆசாத் நகருக்கு  செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் அப்பகுதி மக்கள் கடைத்தெரு அனைத்து  பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இந்த சாலை கஜாபுயல் தாக்கத்தால் மரங்கள் சாய்ந்தது. வீடுகளும் சேதமாகியது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இப்பகுதி மக்கள் மாற்று வழியை தற்காலிகமாக பயன்படுத்தி வந்தனர்.

அதன் பின்னர் அரசு மற்றும் தனியார் மீட்புக் குழுவினர் மூலம் சாலையில் கிடந்த  மரங்கள் அகற்றி சரி செய்யப்பட்டது. ஆனால் 69 நாட்களாகியும் சாலையை முழுவதுமாக போக்குவரத்து செல்லும் வகையில் சீரமைக்கவில்லை. இதனால் மக்கள் நடந்து கூட  செல்ல முடியாதளவில் மோசமான நிலையில் உள்ளது. அதேபோல் சமீபத்தில் குடிநீர் சப்ளை தடைபட்டதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் பூமிக்கு அடியில்  உள்ள குழாய்களை சீரமைக்கும் பணி நடந்தது.

அதனால் இந்த சாலையில் ஆங்காங்கே பெரிய சிறியளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டது. குழாய்களை சரி செய்த பின்னர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடவில்லை. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த கஜா புயலுக்கு சேதமான இந்த  சாலையை சீரமைத்து தர வேண்டும். அதே போல் சாலை நெடுவெங்கும் குடிநீர் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களையும் மூடி  பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Ghazipur , Muthupettai, Ghaja storm, people
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...