×

அரும்பாக்கம் ரவுடி கொலையில் பரபரப்பு தகவல் திருந்தி வாழ்ந்தும் கூட்டாளிகளின் சகவாசத்தால் பலியான பரிதாபம்: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்

அண்ணாநகர்: சென்னையில் தனியார் கல்லூரி அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று முன்தினம் ரவுடி குமரேசன் (32), பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாநகர் போலீசார் கொலை செய்யப்பட்ட ரவுடி குமரேசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அண்ணா நகர் உதவி போலீஸ் கமிஷனர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் சூளைமேட்டை சேர்ந்த குமரேசன் (32) பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது சூளைமேடு, பள்ளிக்கரணை, வளசரவாக்கம் ராயலா நகர் ஆகிய காவல்நிலையங்களில் 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.இதையடுத்து, தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், செனாய் நகர் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.மேலும், தலைமறைவாக இருந்த கொலையாளிகளில் 4 பேரை நேற்று அதிகாலை வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் செனாய் நகரை சேர்ந்த சகாயம் (33), கூட்டாளிகளான டோரி கார்த்திக் (34), காத்து தர் (26), கானா குரு (29) ஆகியோர் என தெரிந்தது.

பின்னர் சகாயம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ரவுடி தொழில் மூலம் நண்பரான குமரேசனும், சகாயமும் அண்ணாநகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சகாயத்தின் நண்பர்களான பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜி என்ற டாக்டர் ராஜி, வளசரவாக்கம் ராயலா நகரை சேர்ந்த யுவராஜ் ஆகியோரை யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் குமரேசன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார்.பின்னர், குமரேசன் ரவுடி தொழில் மற்றும் கஞ்சா விற்பதை விட்டுவிட்டு சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால், குமரேசனின் கூட்டாளிகளுக்கு வருமானம் இல்லாததால், அவர்கள் சகாயத்தின் கூட்டாளிகளை தாக்கி கஞ்சா பறித்து வந்து விற்பனை செய்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த சகாயம், குமரேசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.ஆனால், அதற்குள் போலீசார் கொலை வழக்கு தொடர்பாக குமரேசனை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு குமரேசன் விடுதலையாகியுள்ளார். அப்போது அவரை, சகாயம் ஆட்கள் பலமுறை தீர்த்துக்கட்ட முயன்றும் முடியாமல் போனது.இந்நிலையில்தான், கடந்த 22ம் தேதி ஒரு கொலை வழக்கு தொடர்பாக குமரேசன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அண்ணாநகர் வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சகாயம் மற்றும் கூட்டாளிகள், குமரேசன் அண்ணாநகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றபோது பின்னால் வந்து கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர் இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பாம்பு வினோத், வெங்கடேசன், சுரேஷ், விஜய் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder , death , murder , mummies
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு