×

10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வறுமை ஒழிப்புக்கு பயன்படாது : தேஜஸ்வி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, வறுமை ஒழிப்புக்கு பயன்படாது’’ என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக டெல்லியில் நேற்று அளித்த பேட்டி:பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது போல் அவசர கதியில் உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்காக சமூக மற்றும் பொருளாதார ஆய்வு எதையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எந்த ஆணையம் மூலமும் அறிக்கை எதையும் மத்திய அரசு பெறாத நிலையில் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ  தோற்கடிக்கப்படும் என்ற பீதியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு சட்டம் வறுமையை ஒழிக்க பயன்படாது. பெரும்பான்மையான இனத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். அவர்கள் விரைவில் பாஜ.வுக்கு எதிராக திரும்புவார்கள். பின்தங்கிய ஏழைகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், உயர்சாதி ஏழைகள் எந்த கோரிக்கையோ, போராட்டமோ நடத்தாத நிலையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tejaswi , Reservation, Poverty Alleviation, Tejasvi
× RELATED பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி