×

சேத்தியாத்தோப்பு அருகே சாலையோர கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கும்பகோணம் சாலைப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, குடியிருப்புக்கு செல்லும் படிக்கட்டு வழித்தடம் உள்ளது. இவ்வழியாக தினமும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என ஏராளமானவர்கள் செல்கிறார்கள். இந்நிலையில் இப்படிக்கட்டு அருகில் கும்பகோணம்-சென்னைசாலை வளைவுப்பகுதியில் புதர்போல் ஏராளமான கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றன. இப்பகுதியில் குடியிருப்புகளும் ஏராளமாக இருப்பதால் குடியிருப்புக்கு செல்வோரும் இவ்வழியாக செல்வதற்கு அஞ்சுகின்றனர்.

மேலும் கருவேல மரங்கள் அதிக உயரமாக வளர்ந்து மின்கம்பங்களின் மேல் செல்லும் மின்கம்பியின்மீது பட்டு அடிக்கடி தீப்பொறி ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் சென்னை-கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலைப்பகுதியிலிருந்து புதியபாலம் வரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஆபத்தான வளைவில் தடுப்புக் கட்டை அமைக்கவேண்டும். இல்லையேல் இவ்வழியாக செல்வோரும்,இப்பகுதியில் வசித்து வருபவர்களும் எப்போதும் அச்சத்துடனே வாழவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : removal ,Sethiyatope , Request to remove ,roadside tree trees
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...