×

இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

ஜகார்தா: இந்தோனேசியாவில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். சுலவேசி தீவு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள் மற்றும் பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
கனமழையால் இந்தோனேசியாவில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவினால் கோவாஸ் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜீனிபொன்டோ (Jeneponto) மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கோவா (Gowa) பகுதியில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக இந்தோனேசியாவின் பேரிடர் தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள மசூதிகள் மற்றும் முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் நிலச்சரிவினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதேபோல கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமத்ரா தீவின் பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : floods ,Indonesia ,places , dead,floods,landslides,Indonesia,Thousands,refuge,safe places
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!