ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி.. ரசிகர்கள் ஏமாற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதி போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில், செரினா வில்லியம்ஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை செரினா வெற்றி பெற்றாலும் 2-வது சுற்றில் அதற்கு பிளிஸ்கோவா பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் முன்றாவது சுற்று ஆட்டத்தில் அனல் பறந்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் முடிவில் செரினா 6-4, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை பறிகொடுத்தார். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான செரினா வில்லியம்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: