×

தாவரக்கரையில் குட்டிகளுடன் 60 யானைகள் 4வது நாளாக முகாம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் இருந்து ஜவளகிரிக்கு விரட்டப்பட்ட 60 யானைகளும் அதே வேகத்தில் மீண்டும் திரும்பியுள்ளன. தாவரக்கரையில் குட்டிகளுடன் முகாமிட்டு 4வது நாளாக பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியிலிருந்து விரட்டப்பட்ட 60 யானைகள் கடந்த ஒரு வாரமாக பேவநத்தம் வனப்பகுதியில் முகாமிட்டுருந்தன. இந்த யானைகள் பச்சனப்பட்டி, கிரிசெட்டிப்பள்ளி, காடுலக்கசந்திரம், போவநத்தம், லிங்கதீனரப்பள்ளி, திம்மசந்திரம், மேகலகவுண்டனூர் உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்தன. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காடுலக்கசந்திரம், திம்மசந்திரம், மரகட்டா வழியாக தாவரகரைக்கு விரட்டினர்.

தொடர்ந்து யானைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர், நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய போராடி ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டனர். அப்போது, சூலகுண்டா வனப்பகுதி வரை சென்ற யானைகள், நேற்று காலை மீண்டும் தாவரக்கரை வனப்பகுதிக்கு திரும்பின. இதனால், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது 60 யானைகளும் குட்டிகளுடன் 4வது நாளாக தாவரக்கரை வனத்திலேயே முகாமிட்டுள்ளன. அவைகள் தாவரக்கரை, மலசோனை உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை காலதாமதம் செய்யாமல் ஜவளகிரிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tavarakkarai, elephants, camping
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12...