×

அணைக்கட்டு அருகே மயிலார் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் விழா

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த ஊசூர் கிராமத்தில் மயிலார் திருவிழாவையொட்டி நேற்று காளைவிடும் நிகழ்ச்சி நடந்தது.  உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி விழாவை தொடங்கி வைத்தார்.  தாசில்தார்கள் ஹெலன்ராணி, மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் நித்யா முன்னிலை வகித்தனர். விழாவில் ஊசூர், புலிமேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள பங்கேற்றனர். கால்நடை மருத்துவர் ரகு பரிசோதனைக்கு பின்னர் காளைகள் வீதியில் அவிழ்த்து விடபட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் விழாவை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.   

இதில் காளைகள் முட்டியதில் காயமடைந்த 10 பேருக்கு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், அரியூர் போலீசார் உட்பட 100க்கும் மேற்பட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய விலங்குகள் அமைப்புகள் நல வாரிய ஒருகிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல், இணை ஒருங்கிணைப்பாளர் ஐயுப்கான் தலையிலான டெல்லி குழுவினர் வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டனர், விழா குறித்து வேலூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாந்தகுமாரிடம் கேட்டறிந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ceremony ,dam ,festival , anaikattu, festival, bull
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா