×

2019ம் ஆண்டு தொடங்கி 2 வாரத்தில் நாட்டில் 1,694 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: 2019ம் ஆண்டு தொடங்கி 2 வாரத்தில் நாட்டில் 1,694 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகம் பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனவரி 17ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1,036 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், அதில் நேற்று வரை 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் 210 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெல்லியில் 168 பேரும், ஹரியானாவில் 128 பேரும், தெலுங்கானாவில் 107 பேரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் தமிழகத்தில் 48 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக 2017ம் ஆண்டு நாடு முழுவதும் 38,811 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 2,270 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் 14,992 பேருக்கு பன்றி கைவிகள் ஏற்பட்டதாகவும், அதில் 1,103 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றி கைவிகள் குறித்து மக்களிடம் அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swine flu, federal health, information
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...