×

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய இந்தியர்: முகமது ஷமி சாதனை

நேப்பியர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைத்தார். போட்டியின் போது நியூசிலாந்து தொடக்கவீரர் குப்தில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை மிக குறைந்த போட்டிகளில் எடுத்த இந்திய வீரர் எனும் சிறப்பை முகமது ஷமி பெற்றார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஷமி அதனை முறியடித்தார்.

மேலும், இந்திய பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான் 65 போட்டிகளிலும், அகர்கர் 67 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை எடுத்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் சர்வதேச அளவில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எட்டியதில் முதல் இடத்தில் உள்ளார். தனது 44-வது போட்டியில் அவர் 100 விக்கெட்டுகளை எட்டினார். அதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் 53 போட்டிகளிலும், பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளிலும், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் 54 போட்டிகளிலும், பிரட் லீ 55 போட்டிகளிலும் 100 விக்கெட்களை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,Mohammed Shami , ODI,wickets,India,Mohammed Shami,#NZvIND
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...