×

தலிபான்கள் தாக்குதல் : பலி 65-ஆக உயர்வு

காபூல்:  ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.  ஆப்கானிஸ்தானின் மெய்டன் வார்டாக் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினார்கள். கார் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் சம்பவ இடத்தில் பலர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து நேற்று முன்தினம் 65 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taliban ,attack ,hike , Afghanistan, military base, attack, Taliban militants
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை