×

ஆஸி. ஓபன் அரை இறுதியில் நடால்: குவித்தோவா முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ஸ்பெயின்  நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். கால் இறுதியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோவுடன் (39வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (2வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி  முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றிய அவர், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 3வது செட்டையும் 6-2 என கைப்பற்றி டியபோவை  எளிதாக வீழ்த்தினார். நடப்பு தொடரில் நடால் இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்திலேயே  முடிவுக்கு வந்தது.

மற்றொரு கால் இறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுத்துடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த  இப்போட்டியில் சிட்சிபாஸ் 7-5, 4-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 3 மணி, 15 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரை இறுதிக்கு  தகுதி பெற்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தியுடன் மோதினார்.  முதல் செட்டில் அதிரடியாக விளையாடி பார்தியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த குவித்தோவா 6-1 என வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது  செட்டில் பார்தி கடுமையாகப் போராடிய நிலையில், குவித்தோவா 6-1, 6-4 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.  இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸ் 2-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டெசியா பாவ்லியுசென்கோவாவை  வீழ்த்தினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,end ,Nadal ,Kuwitova , Aussie. Nadal ,end , semi end,Kuwitova's progress
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...