×

குட்கா வழக்கில் தலைமை செயலாளருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு உத்தரவு

மதுரை: குட்கா முறைகேடு குறித்து தலைமைச்செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வருமான வரித்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நேற்று வருமான வரித்துறையினர் குட்கா விவகாரம் தொடர்பாக டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் 2016-ல் குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை குட்கா நிறுவன குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது காவல் துறையினர், உயர்அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில் அப்போதைய தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், டிஜிபி அசோக் குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி கதிரேசன் என்பவர் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த விசாரணையின் போது தமிழக தலைமை செயலர் தரப்பில் ஒரு பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணங்களும் அரசு அலுவலகங்களில் இல்லை என கூறப்பட்டது. இதனை ஏற்று அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2017-ல் வருமான வரித்துறையினர் சென்னை போயஸ் காடனில் சோதனையில் ஈடுபட்ட போது குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறையினர் அளித்த கடிதம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களும் வருமான வரித்துறையினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் அடிப்படியில் தமிழக தலைமை செயலர் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்துள்ளார். ஆகவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆவணங்களை சீலிட்ட கவரில் ஜனவரி 28ல் வருமானவரித்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Secretary ,Gudka , Gudka Case, Chief Secretary, Profile, Income Tax Department
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...