×

கொட்டும் பனியிலிருந்து பாதுகாக்க செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி

ஆண்டிபட்டி:  ஆண்டிபட்டி பகுதியில் கொட்டும்  பனியின் தாக்கத்தில் இருந்து செம்மறி ஆடுகளை காப்பாற்ற  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம், கால்நடை வளர்ப்பதை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளது. இந்நகரை சுற்றி உள்ள பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், கன்னியப்பாபிள்ளைபட்டி, மரிக்குண்டு, கல்லுபட்டி, ஆசாரிபட்டி, ரோசனபட்டி, எரதிமக்காள்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, நாட்டு மாடு, கறவை மாடுகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்க்கப்படுகின்றன.

அதில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருபவர்கள் விவசாய நிலங்களில் திறந்தவெளியில் கிடை அமைத்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் செம்மறியாடுகளை அதிலிருந்து காப்பாற்றுவதற்காக ஆடு வளர்ப்பவர்கள் தடுப்பு ஊசிகளை போட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆடு வளர்ப்பவர்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் செம்மறி ஆடுகளுக்கு பாதிப்பு  வராமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடுகளுக்கு தடுப்பூசிகளை போட்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Snow, Sheep, Vaccine
× RELATED காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி...