×

இலங்கையுடன் டெஸ்ட்: ஆஸி. அணியில் பேட்டர்சன் தேர்வு

சிட்னி: இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர் பேட்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் மண்ணைக் கவ்விய ஆஸ்திரேலிய அணி, அடுத்து இலங்கை அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. இந்த தொடருக்கான் ஆஸி. அணி ஏற்கனவே அறிவிக்கப்படிருந்த நிலையில், ஆஸி. லெவன் அணி சார்பில் களமிறங்கி தொடர்ச்சியாக 2 பயிற்சி ஆட்டங்களிலும் சதம் விளாசிய 25 வயது பேட்ஸ்மேன் குர்திஸ் பேட்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் 24ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்ஷேன், நாதன் லயன், வில் புகோவ்ஸ்கி, மேட் ரென்ஷா, பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், ஜை ரிச்சர்ட்சன், குர்திஸ் பேட்டர்சன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,Aussie ,Sri Lanka ,Patterson ,team , Test,Sri Lanka,Australia,Patterson,team
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...