×

சில்லி பாயின்ட்...

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்கா (110), இங்கிலாந்து (108) அடுத்த இடங்களில் உள்ளன. பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி 922 புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் (897), இந்தியாவின் புஜாரா (881) அடுத்த இடங்களில் உள்ளனர்.
* தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் ஜகார்தாவில் இன்று தொடங்கும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரனீத், எச்.எஸ்.பிரணாய் களமிறங்குகின்றனர். இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி, மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடிகளும் பங்கேற்கின்றனர்.
* புவனேஸ்வரில் நடைபெற உள்ள சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எப்ஐஎச் பைனல்ஸ் தொடரில் (ஜூன் 6-16) இந்தியா, ஜப்பான், ,மெக்சிகோ, போலந்து, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.
* டாடா ஸ்டீஸ் செஸ் தொடரில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மெமதியரோவை வீழ்த்திய இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் 5.5 புள்ளிகள் பெற்று நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் இணைந்து முன்னிலை வகிக்கிறார்.
* முழங்கை மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸி. வீரர் டேவிட் வார்னருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : test cricket, ICC,Viratkohli, India
× RELATED சில்லிபாயின்ட்…