×

திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட 9 தமிழ் அறிஞர்கள் பெயரில் விருதுகள்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட 9 தமிழ் அறிஞர்கள் பெயரில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார்.  விருதாளர்களுக்கு விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கி தங்கப்பதக்கம் அணிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘‘உலகிலேயே தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ் மொழிக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக அரசு ரூ.10 கோடி வழங்கியிருக்கிறது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தையும் ஒரே தளத்தில் வெளியிட்டு தமிழர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தையும் அறிவித்து அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது.
மெரினா வளாகத்தில் தொல்காப்பியர் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மறைந்த ஐராவதம் மகாதேவன் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அரசு பரிசீலிக்கும்’’ என்றார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பென்ஜமின் ஆகியோரும் பேசினார்கள். விழாவில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்றவர்கள் விவரம்: தமிழ் வளர்ச்சி துறை திருவள்ளுவர் திருநாள் 2019 - விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வழங்கினார். அதன்படி,

1. திருவள்ளுவர் விருது - 2019 : எம்.ஜி.அன்வர் பாட்சா
2. பெரியார் விருது - 2018 : சி.பொன்னையன்
3. அம்பேத்கர் விருது - 2018 : சி.ராமகுரு
4. அண்ணா விருது - 2018 : மு.அய்க்கண்
5. காமராஜர் விருது - 2018 : பழ.நெடுமாறன்
6. பாரதியார் விருது - 2018 : மா.பாரதி சுகுமாரன்
7. பாரதிதாசன் விருது - 2018 : தியாரூ
8. திரு.வி.க. விருது - 2018 : கு.கணேசன்
9. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - 2018 :

சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  தமிழறிஞர்கள் 92 பேருக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 பெறுவதற்கான அரசாணைகளையும் முதல்வர் வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : scholars ,Tamil ,Ambedkar ,Anna ,Periyar ,Thiruvalluvar ,Kamarajar ,Chief Minister ,Edappadi , Thiruvalluvar, Periyar, Ambedkar, Anna, Kamarajar, Awards, Chief Minister Edappadi
× RELATED தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை